ரூ.5 லட்சம் மேக்கப் சாதனங்கள் திருட்டு: பிரபல நடிகர் புகார்

ரூ.5 லட்சம் மேக்கப் சாதனங்கள் திருட்டு: பிரபல நடிகர் புகார்
விஷ்ணு மன்சு

ரூ.5 லட்சம் மதிப்புள்ள மேக்கப் சாதனங்கள் உள்ள பெட்டி, திருடுபோய்விட்டதாக, பிரபல நடிகர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மன்சு. நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷ்ணு, தெலுங்கு நடிகர்கள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இவர், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மேக்கப் சாதனங்களை கொண்ட பெட்டியை, தனது வீட்டில் வைத்திருந்தாராம். அது திடீரென காணாமல் போனது. இதையடுத்து, யாரோ அதைத் திருடிச் சென்றுவிட்டதாக ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ் காவல் நிலையத்தில் விஷ்ணு புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷ்ணு மன்சு
விஷ்ணு மன்சு

முன்னதாக, நடிகர் சங்க அலுவலகத்திலிருந்து மேக்கப் பெட்டி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. ஆனால், விஷ்ணு வீட்டில்தான் அது காணாமல் போனதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேக்கப் பெட்டி காணாமல் போனதை அடுத்து விஷ்ணு மன்சுவின் சிகை அலங்கார நிபுணர் நாகா ஸ்ரீனுவை தொடர்புகொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in