நாகர்கோவிலில் விஷாலின் ‘லத்தி’ பட ஷூட்டிங்

நாகர்கோவிலில் விஷாலின் ‘லத்தி’ பட ஷூட்டிங்

'வீரமே வாகை சூடும்' படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் படம், ’லத்தி’. அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. இது விஷால் நடிக்கும் 32-வது படம்.

நடிகர்கள் நந்தாவும் ரமணாவும் தயாரிக்கின்றனர். விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அங்கு பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கி வந்தனர்.

சமீபத்தில் படப்பிடிப்பு அங்கு நிறைவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்டப் படப்பிடிப்பு நாகர்கோவிலில் இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. பின்னர் சென்னையில் சில நாட்கள் நடத்தப்படும் படப்பிடிப்புடன் படம் நிறைவடைவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in