காரைக்குடியில் பெய்த திடீர் மழை... உற்சாகத்தில் மிதக்கும் நடிகர் விஷால்

Photo Background
Photo BackgroundBG

நடிகர் விஷால், ஹரி இயக்கத்தில் நடித்து வரும் ’விஷால் 34’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்திற்கு ’விஷால் 34’ என தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தாமிரபரணி, பூஜை திரைப்படங்களை தொடர்ந்து விஷாலும், ஹரியும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, கெளதம்மேனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் பதிவு
நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் பதிவு

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்து விட்ட நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு, காரைக்குடியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ”கடைசி நாள் படப்பிடிப்பில் மழை பெய்தது. இறைவன் ஆசிர்வாதமாக கருதுகிறோம்” என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ’விஷால் 34’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷால் 34 போஸ்டர்
விஷால் 34 போஸ்டர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in