என் எதிர்வீட்டில் நடந்த சம்பவம்தான் ’விருமன்’: முத்தையா

’விருமன்’ கார்த்தி, அதிதி ஷங்கர்
’விருமன்’ கார்த்தி, அதிதி ஷங்கர்

’‘என் எதிர்வீட்டில் நடந்த சம்பவத்தைதான் விருமன் கதையாக்கி இருக்கிறேன்’’ என்று இயக்குநர் முத்தையா தெரிவித்தார்.

கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ’விருமன்’. முத்தையா இயக்கும் இந்தப் படத்தில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

கார்த்தி, அதிதி
கார்த்தி, அதிதி

படம் பற்றி இயக்குநர் முத்தையா கூறும்போது, ‘‘என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவத்தைதான் இந்தப் படத்தின் கதையாக மாற்றி இருக்கிறேன். வாழ்க்கையில் எல்லோரும் தவறு செய்வார்கள். அதை யாராவது தட்டிக்கேட்க வேண்டும். யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்ட வேண்டும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவுதான் நல்ல உறவு. அந்த நேர்மையைச் சொல்லும் படமாக ’விருமன்’ இருக்கும். விருமன் என்றால் தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தால், மறந்துபோன உறவுகள் மனதில் வருவார்கள். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக்கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கிறேன். டைரக்டர் ஷங்கர் மகள் அதிதி, தேன்மொழி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in