பிரபல பாடகர் பங்களாவில் ஓட்டல் தொடங்கும் நடிகை!

பிரபல பாடகர் பங்களாவில் ஓட்டல் தொடங்கும் நடிகை!

பிரபல பாடகரின் பங்களாவை, குத்தைக்கு வாங்கியுள்ள பிரபல நடிகையும் அவருடைய கிரிக்கெட் வீரர் கணவரும் இணைந்து ஓட்டல் நடத்த உள்ளனர்.

பிரபல இந்தி பின்னணி பாடகர் கிஷோர் குமார். தனது இனிமையான குரலால் ரசிகர்களை வசப்படுத்திய இவர், பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடியிருக்கிறார். மறைந்த இவர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் கொண்டவர். மும்பை ஜூஹுவில் இவருக்கு கவுரி கஞ்ச் (Gouri Kunj) என்ற பிரம்மாண்ட பங்களா இருக்கிறது.

இந்தப் பங்களாவை, பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி இப்போது குத்தகைக்கு வாங்கியுள்ளார். இங்கு அவர் ஓட்டல் நடத்தப் போவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இதை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர், விராத் கோலிக்கு அந்த பங்களாவை ஐந்து வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்திருக்கிறோம் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார். அந்தப் பங்களா மிகப்பெரியது என்றாலும் அதன் ஒரு பகுதியை மட்டும் குத்தகைக்கு கொடுத்திருப்பதாகவும் அங்கு புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருதாகவும் அடுத்த மாதம் இந்த ஓட்டல் திறக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் விராத் கோலியும் அவர் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து ஒன் 8 கம்யூன் (one8 commune) என்ற பெயரில் ஓட்டல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in