
நடிகை சமந்தா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்வதில் தீவிர ஆர்வமுடையவர். தற்போது மையோசிடிஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். ஏற்கெனவே கமிட் ஆன படங்களின் படப்பிடிப்புக்கும் சமந்தா பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், சமந்தா ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், ‘எதுவுமே சீக்கிரம் முடிந்துவிடுவதில்லை. இது போன்ற என்னுடைய கடினமான நாட்களிலும் என்னை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்துள்ள என் ட்ரைய்னருக்கு நன்றி. எந்த அளவுக்கு கடினமான ஆட்டோ இம்யூன் டயட்டில் இருக்க முடியுமோ அதை இப்போது பின்பற்றுகிறேன். வலிமை என்பது நாம் சாப்பிடுவதில் மட்டுமல்ல நம்முடைய எண்ணத்திலும் இருக்கிறது என்பதை இந்த நாட்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது’ என சமந்தா அந்த பதிவில் தெரிவித்திருக்க திரைத்துறை நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமந்தாவுக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.