வைரலாகும் நடிகர் விஜய்யின் 'வாரிசு' பட புதிய ஸ்டில்கள்

வைரலாகும் நடிகர் விஜய்யின் 'வாரிசு' பட புதிய ஸ்டில்கள்

நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு" படத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற நிலையில், தீபாவளியன்று படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய புகைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளன. இவற்றை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in