’10 பெண்களுடன் பாலியல் உறவு’: வில்லனுக்கு குவியும் கண்டனங்கள்

’10 பெண்களுடன் பாலியல் உறவு’: வில்லனுக்கு குவியும் கண்டனங்கள்
நடிகர் விநாயகன்

``பத்துப் பெண்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளேன்'' என்று சர்ச்சையாக பேசிய வில்லன் நடிகருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பிரபல மலையாள நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மற்றும் சிலம்பாட்டம், சிறுத்தை, மரியான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் பல படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்போது நவ்யா நாயருடன் நடித்த ’ஒருத்தி’ படம் வெளியாகி உள்ளது. இதில் விநாயகன் போலீஸ்காரராக நடித்துள்ளார்.

’ஒருத்தி’ விநாயகன்
’ஒருத்தி’ விநாயகன்

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், விநாயகன் மீதான மீ டு புகார் பற்றி கேட்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் ஒருவர் விநாயகன் மீது சில வருடங்களுக்கு முன் மீ டு புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீஸிலும் புகார் செய்திருந்தார்.

மீ டு புகார் பற்றி கேட்டதால் கோபமடைந்த விநாயகன், அப்படி என்றால் என்ன என்று ஆரம்பித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

‘நான் பத்து பெண்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளேன். அந்தப் பெண்களிடம் என்னிடம் உறவு வைத்துக்கொள்ளுமாறு கேட்டேன். இதுதான் நீங்கள் சொல்லும், மீ டூ வா? அந்தப் பெண்களுடன் மீண்டும் உறவுக் கொள்ள விரும்பினால், நான் கேட்பேன். விருப்பம் இல்லை என்றால், இல்லை என்று சொல்வார்கள். யாரும் என்னிடம் வந்து ஒரு பெண்ணின் விளக்கம் என்னவென்று தெரியுமா? எனக் கூறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

பார்வதி திருவோத்து
பார்வதி திருவோத்து

விநாயகனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை, நடிகர் ஹரிஷ் பெராடி, குஞ்சிலா மாசில்லாமணி, ஷரதாக் குட்டி, ஷானிமோல் உஸ்மான் உட்பட நடிகர், நடிகைகள் பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து, விநாயகனின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து, அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பை, ’அவமானம்’ என்று குறிப்பிட்டு கண்டித்துள்ளார்.

Related Stories

No stories found.