ரூ.112 கோடிக்கு விற்கப்பட்டதா கமல் படம்?

ரூ.112 கோடிக்கு விற்கப்பட்டதா கமல் படம்?

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் 112 கோடிக்கு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்பதில் உண்மையில்லை. அதிகபட்சம் 70 கோடி வரை விற்கப்பட்டிருக்கலாம்’ என்கிறது ஓடிடி வணிக வட்டாரம்.

ஆனாலும் இதன் மூலம் படத்தின் மொத்த பட்ஜெட் கிடைத்துவிட்டதாகவும் இனி தியேட்டரின் மூலம் வரும் வருவாய் அனைத்தும் லாபம்தான் என்றும் கூறப்படுகிறது. 2022-ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் அதிக லாபம் ஈட்டிய படங்களின் ஒன்றாக `விக்ரம்' படம் இடம் பெறுவது நிச்சயம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in