விக்ரம் நடிக்கும் ’கோப்ரா’ ஷூட்டிங் முடிந்தது

விக்ரம் நடிக்கும் ’கோப்ரா’ ஷூட்டிங் முடிந்தது

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக, அதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார். ’கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், பத்மப்பிரியா, கனிகா, மிருணாளினி ரவி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் இர்பான் பதான் தொடர்பான காட்சிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்துவிட்டது. இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்து, “கிட்டத்தட்ட மூன்று வருடத்தை நெருங்கிய படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கடினமான காலகட்டத்திலும் அனைத்துவிதமான போராட்டங்களிலும் என் மீது நம்பிக்கைக் கொண்ட விக்ரம் மற்றும் படக்குழுவுக்கும் நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in