விக்ரமின் `கோப்ரா’ ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

விக்ரமின் `கோப்ரா’ ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

விக்ரம் நடித்துள்ள படம், ’கோப்ரா’. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், பத்மப்பிரியா, மிருணாளினி ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார்.

மூன்று வருடங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘ஆதிரா’ என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படம் இந்த மாதம் 26-ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in