விக்ரம் பிரபுவின் ’டாணாக்காரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் பிரபுவின் ’டாணாக்காரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
டாணாக்காரன் - லால், விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடித்த ’டாணாக்காரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெய்பீம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த தமிழ், இயக்கியுள்ள படம், ’டாணாக்காரன்’. இதில், விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார்.

அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு கவனத்தைப் பெற்றுள்ளது. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது:

அஞ்சலி நாயர், விக்ரம் பிரபு
அஞ்சலி நாயர், விக்ரம் பிரபு

'டாணாக்காரன்' என்ற தலைப்பே அழுத்தமாக இருந்தது. இந்த ஸ்கிரிப்டை கேட்ட பிறகு, இதில் நடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன். ஒரு நடிகராக எனது திறமையை வெளிப்படுத்தும் படைப்பாக இது இருக்கும். தமிழ் திரையுலகில் படைப்பாற்றல் மற்றும் திறமையாளர்களை கண்டெடுத்து, வளர்க்கும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் போன்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவது, அற்புதமான அனுபவம். இயக்குநர் தமிழ், இந்தப் படத்தை தன் உயிராக வடிவமைத்து, அற்புதமான படைப்பாகச் செதுக்கியுள்ளார். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் படம் ஏப்ரல் 8-ம் தேதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.