ஹாட் ஸ்டாரில் விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’

ஹாட் ஸ்டாரில் விக்ரம் பிரபுவின்  ‘டாணாக்காரன்’
டாணாக்காரன் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர்

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அடுத்த மாதம் வெளியாகிறது.

மாயா, மான்ஸ்டர், மாநகரம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள, பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள படம் ‘டாணாக்காரன்’. இதை எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ். ஆர். பிரபு, பி, கோபிநாத், தங்க பிரபாகரன் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். அஞ்சலி நாயர் நாயகியாகவும், லால், எம் எஸ் பாஸ்கர், லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ’ஜெய் பீம்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்ற தமிழ், இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவர் இதற்கு முன் வெற்றிமாறனிடம் அசோஷியேட் இயக்குநராக பணியாற்றியவர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.