விக்ரம் பிரபுவுடன் மீண்டும் இணையும் ஸ்ரீ திவ்யா

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா

நடிகர் விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படத்துக்கு ’டைகர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் முத்தையா, கதை, வசனத்தில், விக்ரம் பிரபு நடிக்கும் படம் ’டைகர்’. இதை கார்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தை எம் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 'வெள்ளக்கார துரை' படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்த ஸ்ரீதிவ்யா இதில் நாயகியாக நடிக்கிறார்.

‘டைகர்’ படத் தொடக்கவிழாவில்...
‘டைகர்’ படத் தொடக்கவிழாவில்...

நடிகர் சக்தி வாசு வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், அனந்திகா மற்றொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி கார்த்தி கூறும்போது, “இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் த்ரில்லராக இருக்கும். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் முத்தையா பங்களிப்பது உண்மையில் மகிழ்ச்சியை தந்துள்ளது. இது நிச்சயமாக ரசிகர்களை ஈர்க்கும்”’ என்றார்.

நடிகர் விக்ரம் பிரபு, புலிகுத்திப் பாண்டி படத்துக்குப் பிறகு டாணாக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து டைகர் படத்தில் நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in