விரைவில் ஓடிடி-யில் வெளிவரும் ‘விக்ரம்': விட்டுப்போன விசேஷக் காட்சிகள் இடம்பெறுமா?

விரைவில் ஓடிடி-யில் வெளிவரும் ‘விக்ரம்': விட்டுப்போன விசேஷக் காட்சிகள் இடம்பெறுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘விக்ரம்' திரைப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வசம் இருக்கும் நிலையில் விரைவில் ஓடிடி வெளியீட்டிற்கான தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். அந்த வகையில், திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் இடம்பெறாத சில காட்சிகள் ஓடிடியில் படம் வெளியாகும்போது இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

‘விக்ரம்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, ‘டிஏஜிங் (deaging) தொழில்நுட்பம் மூலமாக கமலின் இளம் வயது தோற்றம் கொண்ட காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவை எதுவும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் இல்லை.

அந்தக் காட்சிகளை சரியான முறையில் தயார் செய்து படத்தில் இணைப்பதற்குக் கால அவகாசம் அதிகம் தேவைப்படும் என்பதால் படக்குழுவினர் அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், ஓடிடியில் வெளியாகும்போது கமல்ஹாசனின் இளம் வயது காட்சிகள் நிச்சயம் இடம்பெறும் எனச் சொல்லப்படுகிறது.

இதனால், ரசிகர்கள் 'விக்ரம்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in