‘விக்ரம்’ படத்தின் 100வது நாள் வெற்றிவிழா: ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

‘விக்ரம்’ படத்தின் 100வது நாள் வெற்றிவிழா: ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழா குறித்த அறிவிப்பினை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், “கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெகு விமரிசையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்தின் வெற்றிவிழா நவம்பர் 7ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

‘விக்ரம்’ படத்தின் தயாரிப்பாளர்களான கமல் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து நடத்தும் இந்த வெற்றிவிழாவில், ‘விக்ரம்’ படத்தில் பங்காற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல், சூர்யா, பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in