இணையத்தில் கசிந்த ‘விக்ரம்’: படக்குழு அதிர்ச்சி!

இணையத்தில் கசிந்த ‘விக்ரம்’: படக்குழு அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. இதில், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், இன்று (ஜூன் 3) வெளியாகியுள்ளது.

நான்கு வருடத்துக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் என்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் படத்தைப் பாராட்டி விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம் போல இந்தப் படமும் இணையத்தில் கசிந்துள்ளது. மர்மநபர்கள் திருட்டுத்தனமாக சில இணைய தளங்களில் மொத்தப் படத்தையும் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களில், ‘ஆர்ஆர்ஆர்’, ‘கே.ஜி.எஃப்-2’ , ‘ராதே ஷ்யாம்’, ‘வலிமை’ போன்ற பல தென்னிந்திய படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளங்களில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in