`விக்ரம்' படம் கண்டிப்பா பிளாக் பஸ்டர்தான்'- வாழ்த்திய உதயநிதிக்கு கமல்ஹாசன் நன்றி

`விக்ரம்' படம் கண்டிப்பா பிளாக் பஸ்டர்தான்'- வாழ்த்திய உதயநிதிக்கு கமல்ஹாசன் நன்றி

படத்தின் புரமோஷன் பணிகளுக்காக கமல்ஹாசனும் ரஜினிகாந்த் உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் கேரளா, மலேசியா ஆகிய பகுதிகளில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் விக்ரம் படத்தின் புரமோஷன் பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. துபாயில் உள்ள உலகின் உயர்ந்தக் கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ‘விக்ரம்’ ட்ரெய்லர் நேற்றிரவு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் உள்பட படக்குழுவின் பங்கேற்றனர்.

இந்நிலையில், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "விக்ரம் படம் சூப்பர்... கண்டிப்பா பிளாக் பஸ்டர்தான்" பதிவிட்டுள்ளார். இதனை ரி-ட்விட் செய்துள்ள கமல்ஹாசன், அன்பு தம்பி உதய்ஸ்டாலின், விக்ரம் படம் பற்றிய உங்களது முதல் பார்வைக்கு நன்றி. உங்களுடைய இந்த விமர்சனம் எனது மற்ற சகோதரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும்'' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in