பூஸான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் விக்ரம்!

பூஸான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் விக்ரம்!

பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில்,  புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியானது. இந்தப்படம் உலகம் முழுக்கப் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பியப் பகுதிகளில் 2022 வெளியான இந்தியத் திரைப்படங்களிலேயே விக்ரம்தான் பெறும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னலின் தலைமை நிர்வாகி நாராயணன், “உலகெங்கிலும் விக்ரம் திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. பூஸான் சர்வதேசத் திரைப்பட விழா இந்தத் திரைப்படத்தின் கிரீடத்தில் சூட்டப்படும் இன்னொரு வைரக் கல்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in