விக்ரம் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்!

விக்ரம் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்!
ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்

நடிகர் விக்ரமின் ’மகான்’ பட ரிலீஸை அடுத்து, அவர் ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன், சனத், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள படம், ’மகான்’. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த இந்தத் திரைப்படம் நேற்று இரவு அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் கன்னடத்தில் ’மகா புருஷா’ என்ற பெயரிலும் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.

துருவ் - விக்ரம்
துருவ் - விக்ரம்

இந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விக்ரமின் 60-வது படமான இதைக் கொண்டாடும் வகையில், அவர் ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

விக்ரம் ரசிகர்கள் 60 பேர் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை பகுதிகளில் பைக் ஓட்டி, விக்ரமின் அன்பையும் நேர்மறை எண்ணத்தையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். விக்ரமின் திறமையான நடிப்பை பாராட்டுவதற்காக ரசிகர்கள் இதைச் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.