கமலின் ‘விக்ரம்’ 2 நாள் வசூல் எவ்வளவு?

கமலின் ‘விக்ரம்’ 2 நாள் வசூல் எவ்வளவு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.

'விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று முன் தினம் (ஜூன் 3) வெளியானது. நான்கு வருடத்துக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் என்பதால் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதால் அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் ‘விக்ரம்’ படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியான இரண்டே நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய கமல்ஹாசனுடைய மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in