அமேசான் பிரைமில் வெளியாகிறது விக்ரமின் ’மகான்’

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்
விக்ரம்
விக்ரம்

விக்ரம் நடிக்கும் ’மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'மகான்'. இதில் விக்ரமுடன் அவர் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத், தீபக் பரமேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் த்ரில்லர் கதையான, இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் ’மகான்’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ படமும் ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in