`தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்களுக்கு..!'- விக்ரம் 100-வது நாளில் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் இன்று நூறாவது நாள் ஆகும். இதனையொட்டி நடிகர் கமல்ஹாசன் தன் சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியான ஆடியோ ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.

கைதி, மாஸ்டர் படங்களுக்குப் பின்பு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தத் திரைப்படம் தான் விக்ரம். இதில் கமல்ஹாசன் மட்டுமல்லாது பகத் பாசில், விஜய் சேதுபதி, ஜெயராமின் மகனான காளிதாஸ் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் உண்டு.

திரையரங்கில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த விக்ரம், ஓடிடியிலும் வெளியாகி பெரும் கவனம் ஈர்த்தது. இப்படத்தின் நூறாவது நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மொத்தமே 22 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த ஆடியோவில், ‘ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. தம்பி லோகேஷிற்கு என் அன்பும், வாழ்த்தும்!” என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in