கவிதைக்குத் தனிப்பெயர் தேவையில்லை... மகளின் பெயரை அறிவித்த நடிகர் புகழ்!

குழந்தையுடன் புகழ்
குழந்தையுடன் புகழ்

நடிகர் புகழ் தனது மகளின் பெயரை புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் ’கலக்க போவது யாரு?’, ‘குக் வித் கோமாளி’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர் புகழ். அதன் பிறகு அஜித், சந்தானம் போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்தார். இவருக்கும் பென்சி என்பவருக்கும் கடந்த வருடம் காதல் திருமணம் நடந்தது.

இதனையடுத்து தான் தந்தையாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை சொன்ன புகழ் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதையும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த நிலையில், தன் குழந்தைக்கு ரித்தன்யா எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனை புகைப்படத்துடன் பகிர்ந்து, ‘என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ! கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி! ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே!

கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை. இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in