ஸ்டைலாக கோட் சூட்... ஆக்ரோஷ பார்வை: வெளியானது `தளபதி 66' பர்ஸ்ட் லுக்!

ஸ்டைலாக கோட் சூட்... ஆக்ரோஷ பார்வை: வெளியானது `தளபதி 66' பர்ஸ்ட் லுக்!

விஜய் நடிக்கும் 66-வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கிய ’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றும் ஷாம், சரத்குமார், பிரபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதன் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடந்து வருகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ’வாரிசு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கேப்ஷனாக ’த பாஸ் ரிட்டர்ன்ஸ்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அப்பாவுக்கும் மகனுக்குமான கதை என்பதால், இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டைட்டில் போஸ்டரில் ஸ்டைலாக கோட் சூட் அணிந்து, ஆக்ரோஷமாக பார்த்தபடி இருக்கிறார் விஜய். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in