செல்போனுக்கு தடை போட்ட லோகேஷ்: விஜய்யின் `தளபதி 67' படம் பூஜையுடன் தொடங்கியது!

செல்போனுக்கு தடை போட்ட லோகேஷ்: விஜய்யின் `தளபதி 67' படம் பூஜையுடன் தொடங்கியது!

`தளபதி 67'" திரைப்படத்தின் படபூஜை இன்று காலை சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். இந்த படம் 2021-ல் வெளியானது. கரோனா முடிவுக்கு வந்த நிலையில் முதன் முதலாக திரையரங்கில் இந்த படம் வெளியானது. ஆக்‌ஷன் நிறைந்த மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வாரிசு படத்துக்கு பிறகு விஜய்யின் 67-வது படம் இது என்பதால், தளபதி 67 என அழைக்கப்பட்டது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் தளபதி 67 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில், செல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை. தளபதி 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ரெட் டோனில் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in