விஜய்யின் ’பீஸ்ட்’ காட்சிகள் கசிந்ததா?

பீஸ்ட்- விஜய், பூஜா ஹெக்டே
பீஸ்ட்- விஜய், பூஜா ஹெக்டே

விஜய்யின் ’பீஸ்ட்’ காட்சிகள் இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அரபிக் குத்து, விரைவாக 10 கோடி பார்வைகளை பெற்று சமீபத்தில் சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சில காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. நடிகர் விஜய், யாரிடமோ போனில் பேசி, சவால் விடுவது போலவும் அருகில் குதிரைகள் நிற்கும் காட்சிகளும் உள்ளன. இது ஜார்ஜியாவில் எடுக்கப்பட்ட காட்சி என்றும் படத்தின் டப்பிங் நடந்தபோது அங்கிருந்து இது கசிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இணையதளங்களில் கசிந்துள்ள புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என்றும் விஜய் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in