பற்றி எரியும் தீயில் விஜய்யின் உருவம்: 10 ஆயிரம் தீக்குச்சியில் வரைந்து ஆச்சரியப்படுத்திய மதுரை ரசிகர்

பற்றி எரியும் தீயில் விஜய்யின் உருவம்: 10 ஆயிரம் தீக்குச்சியில் வரைந்து ஆச்சரியப்படுத்திய மதுரை ரசிகர்

10 ஆயிரம் தீக்குச்சிகளை வைத்து விஜய்யின் உருவத்தை வரைந்து அசத்தியிருக்கிறார் மதுரை ரசிகர் ஒருவர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்துள்ள `வாரிசு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் ரசிகர்கள் முண்டியடித்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தினர். மேலும் அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பும் நிலவியது.

இந்த நிலையில் 10 ஆயிரம் தீக்குச்சிகளை வைத்து விஜய் உருவத்தை வரைந்து அசத்தியிருக்கிறார் மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர். சிராஜுதீன் என்ற அந்த ரசிகர் விஜய் மீது தீராத பற்று கொண்டுள்ளவராய் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜய்யின் `வாரிசு' படம் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்து விஜய்யின் உருவத்தை 10 ஆயிரம் தீக்குச்சிகளை வைத்து விஜய்யின் உருவத்தை வரைந்து இருக்கிறார். பின்னர் அந்த உருவத்தில் தீயை வைக்கும் சிராஜுதீன், தீ அணைந்த பிறகு விஜய்யின் உருவம் அசத்தலாக தெரிகிறது. விஜய்யின் உருவத்தை வரைந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சிராஜூதின். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in