அசத்தல் சாதனையில் விஜய்யின் ’அரபிக் குத்து’

அசத்தல் சாதனையில் விஜய்யின் ’அரபிக் குத்து’
’பீஸ்ட்’- விஜய், பூஜா ஹெக்டே

’பீஸ்ட்’ படத்தின் அரபிக் குத்து பாடல், யூடியூப்பில் அசத்தல் சாதனை படைத்திருக்கிறது.

விஜய் இப்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஜாக்கோ, ஜான் விஜய், அபர்னா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்
விஜய்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 14 -ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான ’அரபிக் குத்து’ காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை வெளியானது. ’மாம பித்தா பித்தாதே/ மலமா பித்தா பித்தாதே’ என்று தொடங்கும் இந்தப் பாடலை, நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

இசை அமைப்பாளர் அனிருத்தும், ஜோனிதா காந்தியும் பாடியிருந்தனர். இந்தப் பாடல் வெளியான 16 மணி நேரத்தில் 18 மில்லியன் பார்வைகளையும் 2 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று யூடியூபில் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் இதை சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 13-ம் தேதி, மகேஷ்பாபுவின் ’சர்காரு வாரி பாட்டா’ படத்தில் இருந்து வெளியான ’கலாவதி’ என்ற பாடல், 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலுக்கு தமன் இசை அமைத்திருந்தார். சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் ஆடியிருந்தார்.

Related Stories

No stories found.