கூகுளில் அதிக தேடப்பட்ட தமிழ் நடிகர் விஜய், ஹீரோயின் யார்?

கூகுளில் அதிக தேடப்பட்ட தமிழ் நடிகர் விஜய், ஹீரோயின் யார்?

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர் விஜய் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் இணையத்தில் அதிகம் தேடப்படும் பிரபலங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். 2022-ம் ஆண்டில் இதுவரை, ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், தனுஷ், சூர்யா, நடிகைகள் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால் உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகராக விஜய் 22-வது இடத்தைப் பிடித்துள்ளார். நடிகை சமந்தா 18-வது இடத்தையும், நயன்தாரா 33 -வது இடத்தையும் பிடித்துள்ளனர். சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் மூஸ்வாலா மூன்றாவது இடத்தையும், லதா மங்கேஷ்கர் 5-வது இடத்தையும் 7,8,9-வது இடங்களை, முறையே கேத்ரினா கைப், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா இடம்பிடித்துள்ளனர்.

நடிகர் விஜய், இப்போது, வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in