வசூலில் ரஜினியை மிஞ்சிய விஜய்...கொளுத்திப் போட்ட நடிகர் ராமராஜன்!

ரஜினியுடன் நடிகர் ராமராஜன்.
ரஜினியுடன் நடிகர் ராமராஜன்.
Updated on
1 min read

ரஜினியை விஜய் மிஞ்சி விட்டார் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

பட வியாபாரத்தில் நடிகர் விஜய், ரஜினிகாந்தை மிஞ்சி விட்டார் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது சமீபத்திய பேட்டியில் ராமராஜன் “நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வசூலைப் பெற்றுள்ளது என சொல்கிறார்கள். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இந்த வயதில் ரஜினி நடித்திருப்பது பெரிய விஷயம்.

அதேபோல, ‘லியோ’ திரைப்படமும் பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். விஜய் நடிகர் ரஜினியை வசூல் ரீதியாகத் தாண்டி அடுத்த உயரத்துக்கு சென்று விட்டார். 'சூப்பர் ஸ்டார்' பட்டம் என்பது மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார். நடிகர் ராமராஜனின் இந்த பேட்டிக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in