விஜய் நடிக்கும் 'தளபதி 67' சூட்டிங் ஸ்பாட் திடீர் மாற்றம்: வெளியான புதிய தகவல்

விஜய் நடிக்கும் 'தளபதி 67'  சூட்டிங் ஸ்பாட் திடீர் மாற்றம்: வெளியான புதிய தகவல்

விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு இடத்தை மாற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் இளம் இயக்குநர்களில் முன்னணி இயக்குநராக மாறியுள்ளவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்', 'கைதி' படங்களை இயக்கிய இவர், 2020-ம் ஆண்டு விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தை 2022-ம் ஆண்டு லோகோஷ் இயக்கினார். மிகப்பெரிய வசூல் சாதனையை இப்படம் பெற்றது.

இந்த நிலையில் அடுத்தாக விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஷால், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

'தளபதி 67' என்ற தற்போது பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மூணாறில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு படப்பிடிப்பை நடத்தினால் ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால், மும்பை அருகே மூணாறு போன்ற இடத்தைத் தேர்வு செய்ய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in