நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து: ஆனால், அதிர்ச்சி கொடுத்த உயர் நீதிமன்றம்

நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து: ஆனால்,  அதிர்ச்சி கொடுத்த உயர் நீதிமன்றம்

நடிகர் விஜய் சேதுபதி தன்னைத் தாக்கியதாகச் சென்னையைச் சேர்ந்த மகாகாந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு மைசூர் செல்வதற்காக மகாகாந்தி என்பவர் பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போது நடிகர் விஜய் சேதுபதியைப் பார்த்து அவர் குரல் எழுப்பியிருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் சேதுபதி, அவரை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மீது மகாகாந்தி புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரணை செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அதன் மீது விளக்கமளிக்குமாறு விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யுமாறு விஜய் சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தகுந்த ஆதாரம் இல்லாமல் அளிக்கப்பட்ட புகாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. அதே வேளையில் விஜய் சேதுபதி மீது மகாகாந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த வழக்கை விஜய் சேதுபதி எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in