AK62-ல் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

AK62-ல் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `காத்துவாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ளது இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்தடத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து AK62 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்திற்காக அஜித்துக்கு ரூ.105 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக, விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார்.

இந்த கேள்வியை விஜய் சேதுபதியும், இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கேட்டாராம். அதற்கு, 'என் ஹீரோவை நான் வில்லனாக பார்க்க மாட்டேன்' என்று விக்னேஷ் சிவன் சொல்லிவிட்டாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in