வெற்றி மாறனின் `விடுதலை’யில் விஜய் சேதுபதியின் மகன்

வெற்றி மாறனின் `விடுதலை’யில் விஜய் சேதுபதியின் மகன்

வெற்றிமாறன் இயக்கும் ’விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

’அசுரன்’ படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம், ’விடுதலை’. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ கதையைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் நான்காவது கட்டப்படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது . இதற்காக கிராமம் செட் ஒன்றை அங்கு உருவாக்கி விஜய்சேதுபதி பங்கேற்ற சண்டைக் காட்சிகளை படமாக்கினர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பழங்குடியின வாலிபராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சூர்யா, ’நானும் ரவுடிதான்’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். ’விடுதலை’ படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in