`மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’- விஜய் சேதுபதி பட ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

`மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’- விஜய் சேதுபதி பட ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

விஜய் சேதுபதி நடித்துள்ள ’மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ள படம், ’மாமனிதன்’. சீனு ராமசாமி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது. விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. எனக்கு கிடைத்திருப்பதில் பெருமை’’ என்று தெரிவித்திருந்தார்.

2019-ம் ஆண்டே முடிக்கப்பட்ட இந்தப்படம் கரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. பின்னர் மே 6-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்போது, இதன் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி ஸ்டூடியோ 9 சுரேஷ் ட்விட்டரில் வெளியிட்டப் பதிவில், ’விஜய் சேதுபதி நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால், ’மாமனிதன்’ படத்தின் வெளியீடு மே 20-ம் தேதியில் இருந்து ஜூன் 24-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட ’மாமனிதன்’ தகுதியான படம். அனைத்துத் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in