இளையராஜா, யுவன்... ’மாமனிதன்’ பாடல் வெளியீட்டில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

இளையராஜா, யுவன்... ’மாமனிதன்’ பாடல் வெளியீட்டில் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
மாமனிதன் பாடல் வெளியீட்டு விழாவி..

யுவன் ஷங்கர் ராஜா, இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது பெருமை என்று நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்துள்ள படம், ’மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தை, ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிடுகிறார். 2019-ம் ஆண்டே முடிக்கப்பட்ட இந்தப்படம் கரோனா மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. தற்போது அடுத்த மாதம் 20-ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. விழாவில், பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. எனக்கு கிடைத்திருப்பதில் பெருமை. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவர் இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.