அஜித் படத்தையடுத்து ஹெச்.வினோத்துடன் இணையும் விஜய் சேதுபதி?

அஜித் படத்தையடுத்து ஹெச்.வினோத்துடன் இணையும் விஜய் சேதுபதி?

அஜித்துடன் தற்போதைய படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹெச்.வினோத், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

'சதுரங்க வேட்டை' படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வினோத். அதன் பிறகு நடிகர் கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் மூலமாக ரசிகர்களிடையே கவனம் பெற்றார். குறிப்பாக நடிகர் அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' தற்போது அவருடைய 61-வது படம் என போனி கபூர் தயாரிப்பில் 'நேர்கொண்ட பார்வை'யில் இருந்து தற்போது வரை மூன்று படங்கள் இந்த கூட்டணி இணைந்து பணியாற்றி உள்ளது.

மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள இதன் கதை வங்கிக் கொள்ளை தொடர்பானது என தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆக் ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் கதையின் பின்னணி இசை ஜிப்ரான். இவர் ஏற்கெனவே 'வலிமை' படத்திலும் பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில், அஜித் படத்திற்கு பிறகு இயக்குநர் வினோத் அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைகிறார். அவரை வைத்து கதாநாயகனாக படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஹெச். வினோத்தே படத்தையும் தயாரிக்கிறார். கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து சம்மதித்தால் அவரும் ஹெச்.வினோத்துடன் இணைந்து தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்ட பேச்சுகள் இப்பொழுது தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதி கைவசம் தற்போது 'விடுதலை', 'மாமனிதன்' மேலும் இந்தியில் ஒரு படம் என பல படங்கள் இருக்கின்றன. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரமான சந்தானத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி- ஹெச். வினோத் என்ற கூட்டணி புதிதாக இருக்கும் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in