விக்னேஷ்சிவனுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி?

விக்னேஷ்சிவன் & விஜய்சேதுபதி
விக்னேஷ்சிவன் & விஜய்சேதுபதிவிக்னேஷ்சிவனுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி?

இயக்குநர் விக்னேஷ்சிவன் தன்னுடைய ஆறாவது படத்திற்காக மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ்சிவன் நடிகர் அஜித்தின் 62-வது படத்தை இயக்குவார் என தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ்சிவன் கதை பிடிக்காததால், அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்குப் பதிலாக மகிழ்திருமேனி படத்தை இயக்குவார் எனவும் சொல்லப்பட்டது. மேலும், ‘ஏகே62’ படம்தான் விக்னேஷ்சிவன் இயக்கவில்லை, அதற்குப் பதிலாக அவர் ‘ஏகே63’ இயக்குவார் எனவும் தகவல்கள் வெளியானது.

அதற்கேற்றாற்போல, இயக்குநர் விக்னேஷ்சிவனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் அஜித்துடன் எடுத்தப் படத்தை மாற்றியது, பயோவில் வைத்திருந்த ‘ஏகே62’ என்ற டேக்கை நீக்கி ‘விக்கி 06’ எனவும் மாற்றினார். ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தன்னுடைய ஆறாவது படத்திற்கான கதையில் விக்னேஷ்சிவன் வேலை செய்து வருகிறார். ஆக்‌ஷன்- என்டர்டெயினராக உருவாகி வரும் இந்தப் படத்திற்காக மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைய இருக்கிறார் விக்கி. ஏற்கெனவே, ‘நானும் ரெளடிதான்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் இவர்கள் இணைந்திருக்கிறார்கள். விரைவில், ‘ஏகே62’ படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறாரா அல்லது விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறாரா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பாக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in