ஷாருக்கானுடன் மோதுகிறார் விஜய் சேதுபதி: `ஜவான்’ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீ இணையும் 'ஜவான்' திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் மும்பையில் நடக்கும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. முன்னதாக, இந்த படத்தில் ராணா டகுபதியை வில்லனாக நடிக்கவைக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் ராணா பிஸியாக இருப்பதால் கால்ஷீட் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இப்படத்தில் நயன்தாராவும் ஷாருக்கானுடன் நடிக்கிறார். ’ஜவான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து அவரது ரசிகர்களிடையே படத்தைப் பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2023 ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், ஷாருக்கான் விஜய் சேதுபதியை பாராட்டிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ``தனது வாழ்க்கையில் இதுவரை கண்டிராத மிக அற்புதமான நடிகர்'' என்று விஜய் சேதுபதியை ஷாருக்கான் புகழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in