சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி?

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, வில்லன் வேடங்களிலும் திறமை காட்டி வருகிறார். இப்போது கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தெலுங்கில் ’உப்பெனா’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, ’புஷ்பா’ படத்தில் நடிப்பதில் இருந்து விலகினார்.

இந்தியில் ’மும்பைக்கர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து, மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக, அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் பிரம்மாண்ட ஆக்‌ஷன் படத்தின் ஷூட்டின் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் ஹீரோவுக்கு இணையான வேடம் வில்லனுக்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த கேரக்டருக்கு நடிகர் விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in