
நடிகர் விஜய்சேதுபதி நடித்த முதல் இணையத்தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா மட்டுமல்லாது இணையத்தொடரிலும் நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை கவனம் செலுத்தி வரக்கூடிய காலமிது. சினிமாவைப் போலவே ஓடிடி-க்கும் தனி வியாபாரம் தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில், இணையத்தொடர் ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதியும் களம் இறங்கி இருக்கிறார். அவரது முதல் வெப்சீரிஸான ’ஃபர்சி’ பிப்ரவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.
‘தி ஃபேமிலிமேன்’ புகழ் ராஜ்&டிகே இந்த இணையத் தொடரை இயக்கியுள்ளனர். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்தத் தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, ரெஜினா உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். இதன் மூலம் பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுக்கிறார் விஜய்சேதுபதி. தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் ‘டிஎஸ்பி’ படம் வெளியானது. தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கனுக்கு வில்லனாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து, ‘மும்பைக்கார்’, ’மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘மைக்கேல்’, ‘விடுதலை’, ‘காந்தி டாக்ஸ்’ உள்ளிட்டப் படங்கள் இவரது கைவசம் உள்ளது.