விஜய் சேதுபதியின் இந்திப் பட ரிலீஸ் எப்போது?

விஜய் சேதுபதியின் இந்திப் பட ரிலீஸ் எப்போது?
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள ’மும்பைக்கர்’ படம், மே மாதம் வெளியாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான படம், ’மாநகரம்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, அதே நிறுவனத்துக்காக, லோகேஷ் கனகராஜ் ’கைதி’ படத்தை இயக்கினார்.

இந்நிலையில், ’மாநகரம்’ இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ’மும்பைக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதி இந்திக்குச் செல்கிறார். விக்ராந்த் மாசே, சஞ்சய் மிஸ்ரா, தன்யா மணிக்டலா, சச்சின் கெடேகர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

’மாநகரம்’ படம் சென்னையை மையமாக வைத்து உருவானது போல, இந்தி ரீமேக், மும்பையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிந்துவிட்டது. அப்போதே ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படம் மே மாதம் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், தேதி வெளியிடப்படவில்லை. ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதா, திரையரங்கில் ரிலீஸ் செய்வதா என்பது குறித்து இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in