நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா

நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், இந்தி நடிகை ஊர்வசி ரவுதலா, துஷார் கபூர் உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

தென்னிந்தியாவில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், நடிகர்கள் ஆர்.பார்த்திபன், சிம்பு உட்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகை பிரணிதா இந்த விசாவை பெற்றிருந்தார். இதுபற்றி சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிந்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in