விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் கூட்டணியில் உருவாகும் த்ரில்லர் படம்

விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் கூட்டணியில் உருவாகும் த்ரில்லர் படம்

பாலிவுட்டில் 2018-ம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘அந்தாதூன்’. இத்திரைப்படம் தெலுங்கில் ‘மேஸ்டிரோ’, மலையாளத்தில் ‘ப்ரம்மம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது தமிழில் பிரசாந்த் நடிப்பில் ‘அந்தாகன்’ என்ற பெயரில் உருவாகிவருகிறது.

‘அந்தாதூன்’ வெற்றிக்குப் பிறகு மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கவுள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் விக்கி கௌஷல் கத்ரீனா கைஃபின் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. திருமணம் முடிந்து சில வாரங்கள் ஆகிய நிலையிலேயே நேற்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் கத்ரீனா கைஃப்.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. "அந்தாதுன்’ படத்துக்குப் பிறகு ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.