`அதை மிஸ் செய்துவிட்டேன்; இந்த வாய்ப்பை தவறவிட மாட்டேன்'- விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி`வடசென்னை’ படத்தின் வாய்ப்பை இழந்ததில் வருத்தம்’- விஜய்சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்ததில் வருத்தம் என விஜய்சேதுபதி பேசியுள்ளார்.

இதுகுறித்து, ‘விடுதலை’ பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், " இப்போது மேடையில் சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் 'வடசென்னை'யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன். அதனால் 'விடுதலை' படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றி சாருடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது. முக்கியமானதாக பார்க்கிறேன். ராஜா சாரோட இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது. அதை கூர்ந்து கவனியுங்கள்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, "எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறி உள்ளேன். ஆனால் முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவை இசை கடவுள் என்றே சொல்வேன். அவரது இசையில் பாடலில் நான் ஒரு உருவமாக இருப்பது மகிழ்ச்சி. கதாநாயகர்களுக்கு இணையாக அதிக அளவு ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவர் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று பல சமயங்களில் ஏங்கி இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து பேசிய பொழுது இந்த கதை குறித்து சொன்னார்.

ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி சொல்லி வரும் பொழுது எல்லாவற்றிற்கும் நடிகர்களை கமிட் செய்துவிட்டார். அப்போது லீட் ரோல் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று சொன்னார். நான் சந்தோஷத்தில் எழுந்த போது அந்த வானத்தில் முட்டி இருப்பேன். பிறகு 'வடசென்னை', 'அசுரன்' படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு வாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்து இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகாமல் வெற்றிமாறன் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்குக் இருக்கும் வேறொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in