'புஷ்பா- 2’ வில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?: வெளியானது அப்டேட்!

'புஷ்பா- 2’ வில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா?: வெளியானது அப்டேட்!

அல்லு அர்ஜுனின் ’புஷ்பா 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்பது பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’புஷ்பா’. கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கி இருந்தார். ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பஹத் ஃபாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாயின.

அல்லு அர்ஜுன், விஜய் சேதுபதி, சுகுமார்
அல்லு அர்ஜுன், விஜய் சேதுபதி, சுகுமார்

தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் அடுத்த பாகம் தொடங்க இருக்கிறது. முதல் பாகம் வசூலில் மிரட்டியிருப்பதால் அடுத்தப் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'புஷ்பா 2' படத்தில் விஜய் சேதுபதி, வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. அவர் மனைவியாக பிரியாமணி நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ’புஷ்பா 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ’ஜவான்’ படத்தில் மட்டுமே அவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் வேறு படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in