நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது விஜய் சேதுபதி படம்!

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த ‘விக்ரம்’ படத்தில் அவருடைய வில்லன் வேடம் பேசப்பட்டது. இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் ’விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ’காந்தி டாக்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார். ’புஷ்பா 2’, ஷாருக்கானின் ‘ஜவான்’ படங்களிலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, நிதியா மேனன், இந்தி வி.எஸ்
விஜய் சேதுபதி, நிதியா மேனன், இந்தி வி.எஸ்

இதற்கிடையே மலையாளத்தில் அவர் நடித்த 19(1)(a) படம் பற்றிய அடுத்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. இந்து வி.எஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நித்யா மேனன், மீரா ஜாஸ்மின், இந்திரன்ஸ், இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இந்தப் படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in