விஜய் சேதுபதி, கேத்ரினா நடிக்கும் இந்திப் படத்துக்கு ’வொர்க்‌ஷாப்’

விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப்
விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப்

விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃபுடன் நடிக்கும் இந்திப் படத்துக்கான வொர்க்‌ஷாப் மும்பையில் நடக்க இருக்கிறது.

ஊர்மிளா, சைப் அலிகான் நடித்த, ’ஏக் ஹசினா தி’, நீல் நிதின் முகேஷ் நடித்த ‘ஜானி கட்டார்’, சைப் அலிகான் நடித்த ’ஏஜென்ட் வினோத்’, வருண் தாவன் நடித்த ’பட்லாபுர்’, அயுஷ்மன் குரானா நடித்து சூப்பர் ஹிட்டான ’அந்தாதுன்’ ஆகிய இந்திப் படங்களை இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன்.

இவர், அடுத்து இயக்கும் படம், ’மெர்ரி கிறிஸ்துமஸ்’. இந்த த்ரில்லர் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக, சமீபத்தில் நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்துகொண்ட கேத்ரீனா கைஃப் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி, ஸ்ரீராம் ராகவன், கேத்ரினா
விஜய் சேதுபதி, ஸ்ரீராம் ராகவன், கேத்ரினா

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய இதன் படப்பிடிப்பு கரோனா காரணமாகத் தள்ளிப் போனது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக, வொர்க்‌ஷாப் நடக்க இருக்கிறது. இதில், விஜய் சேதுபதி, கேத்ரினா உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள் பங்கேற்கிறார்கள். இந்தப் படத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் (2022) அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபற்றி விஜய் சேதுபதி கூறும்போது, ‘‘நானும் கேத்ரினாவும் இதற்குமுன் சந்தித்தது கூட இல்லை. அது ஒரு பிரச்சனையாக எனக்குத் தெரியவில்லை. நான் முன்பே சந்தித்திராத பல நடிகைகளுடன் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதைக்காகவும் இயக்குநரின் வித்தியாசமான பார்வைக்காகவுமே இதில் நடிக்க சம்மதித்தேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in