ஷாருக்கான் படத்தில் நடிக்க ஆசையாகக் கேட்ட அட்லீ: அமைதி காக்கும் விஜய் சேதுபதி!

ஷாருக்கான் படத்தில் நடிக்க ஆசையாகக் கேட்ட அட்லீ: அமைதி காக்கும் விஜய் சேதுபதி!

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஓடி ஓடி நடித்து வருகிறார். தமிழில் வெற்றிமாறன் இயக்கும் ’விடுதலை’ படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, மலையாளத்தில் '19(1)' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ராஜ் மற்றும் டீகே இயக்கும் இந்தி வெப் தொடரில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

Akash Balaji

ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தி படமான ’மெர்ரி கிறிஸ்துமஸ்’, கிஷோர் பாண்டுரங் இயக்கும் ’காந்தி டாக்ஸ்’ ஆகிய படங்களின் ஷூட்டிங் இப்போது போய்க் கொண்டிருக்கிறது. அவர் நடித்துள்ள இந்தி படமான மும்பைக்கர் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. சுகுமார் இயக்கும் 'புஷ்பா 2' படத்திலும் முக்கிய கேரக்டரில் அவர் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில்தான், ஷாருக்கானின் ’ஜவான்’ படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை கேட்டிருக்கிறார் அட்லீ. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவது உறுதியானதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதுபற்றி விஜய் சேதுபதி தரப்பில் விசாரித்தபோது," ‘ஜவான்' படத்தில் நடிக்கக் கேட்டது உண்மை. இன்னும் முடிவு செய்யவில்லை" என்றனர். ’ஜவான்’ டீம் கேட்கும் தேதியை ஒதுக்க முடியாததால் விஜய் சேதுபதி தரப்பினர் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in